Monday, November 23, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்9.16 இலட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு!

9.16 இலட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு!

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஆறு மாவட்டங்களில் இன்று (நவம்பர் 22) போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 9.16 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இந்தச் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பாடசாலைகள் மற்றும் முக்கிய பொதுமக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்டோர் வரை

பிறந்த குழந்தைகள் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே முந்தைய முகாம்களில் போலியோ சொட்டு மருந்து பெற்ற குழந்தைகளுக்கும் இன்றைய சிறப்பு முகாமில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெற்றோருக்கு அறிவுறுத்தல்

இளம்பிள்ளை வாத நோயைத் தடுப்பதில் போலியோ சொட்டு மருந்து முக்கியப் பங்கு வகிப்பதால், தகுதியுடைய அனைத்துக் குழந்தைகளையும் அருகிலுள்ள முகாம்களுக்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து வழங்குமாறு பெற்றோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட போக்குவரத்து மையங்களிலும் நடமாடும் குழுக்கள் ஊடாக சொட்டு மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments