கியூபெக்கின் பிரபலமான PEQ நிரந்தரக் குடியுரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
முதல் கட்ட விண்ணப்பங்கள் ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட அறிவிப்புக்காக ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பணியாளர்களும் சர்வதேச மாணவர்களும் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையில், பலருடைய பணி அனுமதிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அவர்களின் வேலைவாய்ப்பும் கியூபெக்கில் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளதாக குடிவரவு உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
PEQ திட்டத்தை நிரந்தரமாக மீண்டும் திறக்க வேண்டும் என்றும், ஏற்கனவே கியூபெக்கில் வசித்தவர்களுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், புதிய விண்ணப்பக் காலக்கெடு குறித்து அரசாங்கம் இன்னும் முடிவெடுக்கவில்லை. எனவே, PEQ திட்டத்தை நம்பியிருக்கும் குடியேற்றவாசிகள் அடுத்த அறிவிப்புக்காகத் தொடர்ந்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


