Monday, November 23, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா–இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் ஸ்காட்ச் விஸ்கிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கலவை செய்து போத்தலில் அடைக்கப்படும் விஸ்கி இறக்குமதிக்கு மீண்டும் 150% வரி விதிக்கப்பட்டுள்ளதால் புதிய வர்த்தகச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஜூலை 15ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. இதன்படி, ஸ்காட்ச் விஸ்கிக்கான இறக்குமதி வரி 150 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகக் குறைக்கப்பட்டதுடன், அடுத்த 10 ஆண்டுகளில் அதனைப் படிப்படியாக 40 சதவீதமாகக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், இங்கிலாந்திலிருந்து மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் கலவை செய்து போத்தலில் அடைக்கப்படும் ஸ்காட்ச் விஸ்கியை, இந்திய சுங்கத்துறை வேறு வரி வகைப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், குறித்த சரக்குகளுக்கு 150 சதவீத வரி விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இங்கிலாந்தின் முன்னணி மதுபான நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமார் 80 முதல் 90 கொள்கலன் சரக்குகள் இந்திய துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

பீப்பாய்களில் மொத்தமாக இறக்குமதி செய்யப்படும் விஸ்கியை நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய மதுபானமாகக் கருதுவதா அல்லது கலவை செய்வதற்கான மூலப்பொருளாகக் கருதுவதா என்பதே இந்தச் சர்ச்சையின் மையமாக உள்ளது.

வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இங்கிலாந்து வலியுறுத்தியுள்ள நிலையில், இரு நாடுகளின் அதிகாரிகளும் இந்தப் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments