Friday, October 9, 2026
spot_img
Homeபொது செய்திகள்1,295 கிலோ பிரம்மாண்ட பூசணி

1,295 கிலோ பிரம்மாண்ட பூசணி

பிரிட்டனின் ஹாம்ப்ஷயர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான விவசாயி இயன் பேட்டன், 1,295.8 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட பூசணிக்காயை வளர்த்து புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.

‘பகீரா’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் பூசணி, பர்க்ஷயரில் நடைபெற்ற போட்டியில் கின்னஸ் அதிகாரிகளின் முன்னிலையில் எடையிடப்பட்டு உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் 2025ஆம் ஆண்டு 1,278.8 கிலோ எடையுள்ள பூசணிக்காயை வளர்த்து சாதனை படைத்திருந்த இயன் பேட்டன், தற்போது தனது சொந்த சாதனையையே முறியடித்துள்ளார்.

இந்தப் பூசணியை பராமரிக்க தினமும் சுமார் 492 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டதுடன், நாளொன்றுக்கு ஆறு மணி நேரம் பராமரிப்புப் பணிகளில் செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதனை படைத்த பூசணி சில வாரங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்ட பின்னர், மாடுகளுக்கு உணவாக வழங்கப்படவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments