Friday, October 9, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்குமரி மாவட்டத்தில் தொடரும் மழை;

குமரி மாவட்டத்தில் தொடரும் மழை;

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால் மாணவர்கள் குடை மற்றும் மழைக்கோட் அணிந்தபடி பாடசாலைகளுக்குச் சென்றனர்.

கன்னியாகுமரியில் வானம் கருமேகங்களுடன் காணப்பட்டதால் சூரிய உதயத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். கடற்கரை பகுதிகளிலும் அதிகாலை நேரத்தில் சாரல் மழை பெய்தது.

சுசீந்திரம், அஞ்சுகிராமம், புத்தேரி, மயிலாடி, சாமித்தோப்பு மற்றும் தக்கலை பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்தது. திருப்பரப்பு அருவி பகுதியில் தொடரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 18.89 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 40.55 அடியாகவும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments