நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தில், அயோத்தி மன்னர் தசரதர் கதாபாத்திரத்தில் நடிகர் அருண் கோவில் நடிக்கிறார்.
இதுதொடர்பான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக ராமானந்த் சாகரின் புகழ்பெற்ற ‘ராமாயணம்’ தொலைக்காட்சித் தொடரில் ராமராக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அருண் கோவில், தற்போது அதே காவியத்தின் திரைப்பட வடிவில் தசரதராக நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷும், அனுமனாக சன்னி தியோலும், லட்சுமணனாக ரவி துபேவும் நடிக்கின்றனர்.
‘ராமாயணம்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதன் முதல் பாகம் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி உலகளவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


