அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்டா பைக் என்ற பெண் கைதிக்கு ஊசி மூலம் மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சி இரண்டு முறை தோல்வியில் முடிந்தது.
50 வயதான கிறிஸ்டா பைக், இரண்டு முறை ‘பென்டோபார்பிட்டல்’ மருந்து செலுத்தப்பட்ட பிறகும் உயிருடன் இருந்ததால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1995-ஆம் ஆண்டு, தனது காதலனுடன் இணைந்து காலீன் ஸ்லெம்மர் என்ற 19 வயது பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றதற்காக 1996-ல் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
புதன்கிழமை இரவு நாஷ்வில்லியில் உள்ள சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது, ஊசி செலுத்தப்பட்ட பிறகும் இவருக்கு இதயத் துடிப்பு இருந்ததோடு, மூச்சுவிடும் சத்தமும் கேட்டதால் வழக்கறிஞர்கள் அவசர மனு தாக்கல் செய்தனர்.
டென்னசி மாநில வரலாற்றில் கடந்த 200 ஆண்டுகளில் எந்தவொரு பெண்ணுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை .
தற்போது கிறிஸ்டா பைக் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு முறை மருந்துகள் செலுத்தியும் மரண தண்டனை நிறைவேறாத பட்சத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சிறைத்துறை விதிகளில் தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை


