2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை டிசம்பர் 4ஆம் திகதி நிறைவு செய்து, 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணையை ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை டிசம்பர் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடையும்.
2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும்.
மேலும், பாடசாலைத் தவணை நிறைவடையும் வரை திட்டமிடப்பட்டுள்ள அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் பரீட்சை நடவடிக்கைகளையும் உரிய கால அட்டவணைகளுக்கு அமைவாக முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தல் அனைத்து மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


