Friday, November 27, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கியூபெக் சட்டமன்றத்தில் மன்னரின் பிரமாணம் – நீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை!

கியூபெக் சட்டமன்றத்தில் மன்னரின் பிரமாணம் – நீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை!

கியூபெக் மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸுக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய வேண்டுமா என்ற சர்ச்சையில், மாகாண அரசாங்கத்தின் மேன்முறையீடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கியூபெக் உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 23ஆம் திகதி வழங்கிய தீர்ப்பில், மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் செய்வதை விருப்பத் தெரிவாக மாற்றிய 2022ஆம் ஆண்டின் சட்டத்தை இடைநிறுத்தியது. இதனால், சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கியூபெக் அரசாங்கம் மேன்முறையீடு செய்துள்ளதுடன், தீர்ப்பை இடைக்காலத்தில் நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்கவும் கோரியுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு மொன்றியலில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதற்கிடையில், எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி சட்டமன்ற அமர்வுகள் திட்டமிட்டபடி ஆரம்பமாகும் என்றும், மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் செய்யாமல் அமர்வுகளை நடத்தத் தாம் விரும்புவதாகவும் கியூபெக் முதலமைச்சர் பால் செயிண்ட்-பியர் பிளமொண்டன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மன்னருக்கு விசுவாசப் பிரமாணம் செய்யாமல் அமர்வுகளில் பங்கேற்க முடியுமா என்பதையும், அதற்கான சட்டப்பூர்வ நிலை என்ன என்பதையும் தீர்மானிப்பதில் இன்றைய விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.

எனினும், தற்போதைய நிலவரப்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவு வெளியாகவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments