Thursday, October 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்பேருந்துடன் மோதிய சைக்கிள் - மாணவன் உயிரிழப்பு

பேருந்துடன் மோதிய சைக்கிள் – மாணவன் உயிரிழப்பு

நோர்ட்டன் பிரிட்ஜ் – ஹட்டன் பிரதான வீதியின் பிக்போன் பகுதியில் இன்று (07) காலை இடம்பெற்ற விபத்தில் தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நோர்ட்டன் பிரிட்ஜ் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி பயிலும் ஜெயராம் போல்ராஜ் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக சைக்கிளில் நோர்ட்டன் பிரிட்ஜ் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துடன் சைக்கிள் மோதியுள்ளது.

இதன்போது பேருந்தின் முன் சக்கரப் பகுதியில் சிக்கி காயமடைந்த மாணவனை, பேருந்தின் சாரதியும் நடத்துநரும் இணைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்ட்டன்பிரிட்ஜ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments