Monday, October 5, 2026
spot_img
Homeஉலக செய்திகள்பிரான்ஸில் தொடர் போராட்டங்கள்; 500 பாடசாலைகளுக்கு பூட்டு

பிரான்ஸில் தொடர் போராட்டங்கள்; 500 பாடசாலைகளுக்கு பூட்டு

பிரான்ஸ் நாட்டில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சுமார் 500 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போராட்டங்களால் பாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கல்வி நிறுவனங்களுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வகுப்பறைகளைச் சேதப்படுத்தியதாகவும், தடுக்க முயன்ற ஆசிரியர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய கல்விக் கொள்கைகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த அரசு முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளை மூட கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆசிரியர்கள் மீதான தாக்குதல்கள் ஏற்க முடியாதவை என்றும் பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வன்முறை பரவாமல் தடுக்கப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களைச் சுற்றிப் பொலிஸார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை சீரடைந்த பின்னரே மூடப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனப் பிரான்ஸ் கல்வித் துறை அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments