Sunday, June 7, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்தோனியின் தலைமையில் மீண்டும் சென்னை அணி

தோனியின் தலைமையில் மீண்டும் சென்னை அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கெப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு காயம் காரணமாக, ஐபிஎல்லின் மீதமுள்ள போட்டிகளுக்கு எஸ். தோனி அணியை வழிநடத்துவார் என்று தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் வியாழக்கிழமை (10) தெரிவித்துள்ளர்.

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் ருதுராஜுக்கு காயம் ஏற்பட்டது, அதன் காரணமாக அவருக்கு அதிக வலி ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவ அறிக்கைகளின்படி, அவர் முழுப் போட்டியிலிருந்தும் விலக வேண்டியிருக்கும் என தெரியவந்துள்ளது.

இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 10 அணிகளில் 9வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments