Monday, July 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தேசிய நேர்மை வாரம்: நாளை மாவட்ட மட்டங்களில் நடைபவணி

தேசிய நேர்மை வாரம்: நாளை மாவட்ட மட்டங்களில் நடைபவணி

தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு நாளைய (28) தினம் மாவட்ட மட்டங்களில் நடைபவணிகள் இடம்பெறவுள்ளன.

“நேர்மையான கலாச்சாரம் – க்ளீன் ஸ்ரீலங்கா” எனும் தொனிப்பொருளில் நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நேர்மை வாரத்திற்கு இணையாக, மாவட்டத்தின் பிரதான அரச நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளை இணைத்து, அரச அதிகாரிகள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களின் பங்கேற்புடன் நாளை (28) அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் மாவட்ட ரீதியிலான நடைபவனி நடைபெறவுள்ளது.

கொழும்பு: சுதந்திர சதுக்கத்தில் இருந்து விஹாரமஹாதேவி பூங்கா வரை.

கம்பஹா: மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து மிரிஸ்வத்தை சந்தி ஊடாக மீண்டும் மாவட்ட செயலகம் வரை.

மொனராகலை: பிரதேச செயலகத்தில் இருந்து மொனராகலை நகரம் வரை.

பதுளை: வில்ஸ் பார்க் மைதானத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை.

கேகாலை: பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் இருந்து சுதந்திர மாவத்தை வரை.

புத்தளம்: இந்து மத்திய மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து பேருந்து நிலையம் வரை.

நுவரெலியா: நுவரெலியா நகரில் நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments