Sunday, September 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்திலீபனின் சிலையை உடைக்கலாம்; நினைவை அழிக்க முடியாது - இயக்குநர் டி.ராஜேந்தர்

திலீபனின் சிலையை உடைக்கலாம்; நினைவை அழிக்க முடியாது – இயக்குநர் டி.ராஜேந்தர்

தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையை அகற்றியமை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தென்னிந்திய திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர், சிலையை உடைக்க முடியும் என்றாலும் தமிழர்களின் நெஞ்சில் திலீபன் பெற்றுள்ள இடத்தை அகற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.

தியாக தீபம் திலீபன் ஒரு அணையா தீபம் எனக் குறிப்பிட்ட அவர், திலீபனின் சிலையை அகற்றிய சம்பவம் தொடர்பில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமது எதிர்ப்பையும் கருத்துகளையும் வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை நோக்கி திலீபன் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள், தமிழ் மக்கள் இருக்கும் வரை நிலைத்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திலீபன் மீது தமிழர்கள் கொண்டுள்ள நினைவையும் மரியாதையையும் எந்த நடவடிக்கையாலும் அழிக்கவோ அகற்றவோ முடியாது என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments