Monday, July 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு பதவி விலகல்!

இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு பதவி விலகல்!

இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளுக்கான தெரிவுக்குழு உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.

நாட்டில் மெய்வல்லுநர் விளையாட்டு நிர்வாகம் மற்றும் தேர்வு முறைகளில் நிலவும் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, தங்களது பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வக் கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் அவர்கள் இன்று (27) கையளித்துள்ளனர்.

பதவி விலகிய இந்த குழுவில் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் டி.ஏ. தயாரத்ன, முன்னாள் தேசிய மெய்வல்லுநர் வீரரும் சாதனையாளருமான கேணல் எம்.கே.பி.ஜயசேகர மற்றும் அரச பாடசாலைகளுக்கு இடையிலான முன்னாள் மெய்வல்லுநர் சாதனையாளரான ரவி வித்யாலங்கார ஆகிய முன்னணி விளையாட்டு ஆளுமைகளும் அங்கத்துவம் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments