Thursday, November 12, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்விராட் கோலி குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் சொன்ன ரகசியம் – வைரலாகும் பதிவு

விராட் கோலி குறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் சொன்ன ரகசியம் – வைரலாகும் பதிவு

தனக்கு பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

TNT Sports உடனான கலந்துரையாடலில், ஒவ்வொரு முக்கிய கிரிக்கெட் நாட்டிலிருந்தும் தனக்குப் பிடித்த வீரரைத் தேர்வு செய்யுமாறு கேட்ட போது, அவர் இந்திய அணியில் விராட் கோலியின் பெயரை தனக்கு பிடித்த வீரர் என குறிப்பிட்டார்.

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் விராட் கோலி மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடையில் பலமுறை நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஆண்டர்சனின் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கோலி தடுமாறினார்.

அந்தத் தொடரில் 10 இன்னிங்ஸ்களில் வெறும் 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். ஆண்டர்சன் அவரை நான்கு முறை ஆட்டமிழக்கச் செய்தார். அந்தத் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஆனால் 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கோலி தனது ஆட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை வெளிப்படுத்தினார்.

இவ்வாறு இருவருக்கும் இடையில் பல போட்டிகளில் நேரடி மோதல்கள் நிலவிய போதிலும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இருந்த போதிலும், ஜேம்ஸ் ஆண்டர்சன், கோலியைத் தேர்வு செய்தது இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments