நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்று வருகிறது.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்ட வாழ்த்துப் பதிவுக்குப் பதிலளித்த நடிகர் சூர்யா, “Thank you Sai (Music)” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிலே தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.
இத்திரைப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.
வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இத்திரைப்படம், ஐந்தாவது நாள் முடிவில் உலகளாவிய ரீதியில் 205 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது எக்ஸ் (X) தளத்தில் சூர்யாவுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அதில், ஜித்து மாதவனின் இயக்கத்தைப் பாராட்டியதுடன், நடிகர் சூர்யாவை எப்போதும் சிறந்தவர் எனப் புகழ்ந்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த சூர்யாவின் “நன்றி சாய் (இசை)” என்ற குறிப்பு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.


