Thursday, November 12, 2026
spot_img
Homeஉலக செய்திகள்தந்தையால் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 11 மாதக் குழந்தை மீட்பு

தந்தையால் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 11 மாதக் குழந்தை மீட்பு

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் 11 மாதக் குழந்தை 24 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையைப் பராமரிப்பாளரிடம் விட்டுவிட்டு தாய் வெளியே சென்றிருந்த சமயத்தில், குழந்தையின் தந்தை  குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளார்.

இதையடுத்து குழந்தை வெகு நேரமாகியும் காணாததால் அவளது தாய் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் குழந்தையைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். குழந்தையின் தந்தையான மைக்கேல் கோமரின் வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் புதிதாகத் தோண்டப்பட்ட மண் இருப்பதை மீட்புக் குழுவினர் கவனித்தனர்.

அதேசமயம் குழந்தை அழும் சத்தமும் கேட்டுள்ளது. இதையடுத்து அந்த இடத்தைத் தோண்டி பார்த்தபோது, நாய் கூண்டில் அடைத்து, குழந்தையை ஒரு துண்டால் சுற்றப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்டது தெரிய வந்தது.

அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் குழந்தையை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

திங்கள்கிழமை பிற்பகல் புதைக்கப்பட்ட குழந்தை, செவ்வாய்க்கிழமை பிற்பகல் கண்டறியப்பட்டது. 24 மணி நேரம் மண்ணுக்குள் புதைந்த நிலையில் குழந்தை இருந்துள்ளது. குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.

இதையடுத்து, உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தந்தையை கைது செய்தனர்.

மீட்கப்பட்ட குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments