Thursday, November 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஆற்றங்கரை மக்களுக்கு எச்சரிக்கை!

ஆற்றங்கரை மக்களுக்கு எச்சரிக்கை!

தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கிரிந்தி ஓயா மற்றும் வளவை ஆற்றுப்படுகைகளில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், மேலதிக நீர் வான்கதவுகள் ஊடாக வெளியேற்றப்பட்டு வருகின்றது.

இதன்படி, லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் தலா 4 அங்குலமும், மேலும் நான்கு கதவுகள் தலா 6 அங்குலமும் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வினாடிக்கு சுமார் 3,000 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்குள் வெளியேற்றப்படுகிறது.

அத்துடன், அலிகோட்ட அர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதுடன், மாவ் ஆறு நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 1,500 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

இதனால் கிரிந்தி ஓயா மற்றும் வளவை நதிப் படுகைகளின் தாழ்வான பகுதிகளில் நீர்மட்டம் திடீரென அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

எனவே, குறித்த ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வெளியிடும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments