Thursday, October 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சம்மாந்துறையில் 21 பேருக்கு டெங்கு தொற்று உறுதி - மக்களுக்கு அவசர எச்சரிக்கை

சம்மாந்துறையில் 21 பேருக்கு டெங்கு தொற்று உறுதி – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவில் இந்த ஆண்டு இதுவரை 21 டெங்கு நோயாளர்கள் உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பருவமழையை முன்னிட்டு பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இம்மாதம் முதல் பருவமழை ஆரம்பிக்கவுள்ளதால், டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும், டெங்கு பரவலைத் தடுக்க பொதுமக்கள் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாரத்திற்கு ஒருமுறை வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை பரிசோதித்து சுத்தப்படுத்துவதுடன், டயர்கள், தேங்காய்ச் சிரட்டைகள், உடைந்த பாத்திரங்கள் உள்ளிட்ட நீர் தேங்கக்கூடிய பொருட்களை அகற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மழைக்காலம் தீவிரமடைவதற்கு முன்னர் வீடுகளின் கூரைகள், பீலிகள் மற்றும் நீர் தேங்கக்கூடிய அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்யுமாறும் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் சம்மாந்துறைப் பிரதேசத்தை டெங்கு அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments