Wednesday, October 7, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவின் தேசிய ஒற்றுமை குறித்து எழுந்துள்ள சவால்

கனடாவின் தேசிய ஒற்றுமை குறித்து எழுந்துள்ள சவால்

கனடாவின் தேசிய ஒற்றுமை குறித்து கடுமையான சவால் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கியூபெக் மாகாணத்தில் இறையாண்மை மற்றும் தனிநாடு கோரும் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, கனடாவின் தேசிய ஒற்றுமை தொடர்பான விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

கனடாவில் நீடிப்பதா அல்லது பிரிந்து செல்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதா என்பது தொடர்பில் அல்பெர்ட்டா மாகாண மக்கள் இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்தில் பொதுவாக்கெடுப்பில் வாக்களிக்கவுள்ள நிலையிலேயே இம்மாற்றம் ஏற்பட்டுள்ளது.

‘பார்ட்டி கியூபெக்வா’ கட்சியின் வெற்றி அல்பெர்ட்டா பிரிவினைவாதிகள் தனித்து நிற்கவில்லை என்பதைக் காட்டுகிறது என ‘அல்பெர்ட்டா புரோஸ்பெரிட்டி புராஜெக்ட்’ அமைப்பின் தலைமை நிர்வாகியுமான மிட்ச் சில்வெஸ்டர் குறிப்பிட்டுள்ளார்.

கனடா அரச நிர்வாகத்தின் மீது அல்பெர்ட்டாவைத் தவிர ஏனைய மாகாணங்களுக்கும் அதிருப்தி உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள இது உதவும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மாகாணத் தேர்தலில் 127 தொகுதிகளில் 59 தொகுதிகளைக் கைப்பற்றி ‘பார்ட்டி கியூபெக்வா’ கட்சி சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளமண்டன், கியூபெக் சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்துவதாக உறுதியளித்துள்ளார்.

எனினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி வகிக்கும் காலத்தில் இது நடைபெறாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரண்டு மாகாணங்களிலும் கனடாவிலிருந்து பிரிந்துசெல்லும் குரல்கள் ஒலித்தபோதிலும், இரு இயக்கங்களின் பின்னணியும் முற்றிலும் வேறுபட்டவையாகும்.

கியூபெக்கின் சுதந்திரக் கோரிக்கை முக்கியமாக மொழி, பண்பாடு மற்றும் பிரெஞ்சு அடையாளத்தைப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டது என்றும், அல்பெர்ட்டாவில் இது பொருளாதாரக் குறைகள் மற்றும் மத்திய அரசு மீதான அதிருப்தியால் இயக்கப்படுகிறது என்றும் செயிண்ட்-ஜீன் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் பிரெட்ரிக் போய்லி சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments