Tuesday, October 27, 2026
spot_img
Homeகனடா செய்திகள்ஒலிவியா சோவ் மீண்டும் டொராண்டோ மேயராகத் தெரிவு!

ஒலிவியா சோவ் மீண்டும் டொராண்டோ மேயராகத் தெரிவு!

கனடாவின் டொராண்டோ நகர மேயராக ஒலிவியா சோவ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை இரவு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், பிராட் பிராட்போர்டை விட 127,000 இற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஒலிவியா சோவ் வெற்றி பெற்றுள்ளார்.

99 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கெடுப்பு நிலையங்களின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ஒலிவியா சோவ் 54 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கிரேட்டர் டொராண்டோ பிராந்தியத்தின் (GTHA) ஏனைய சில நகரங்களிலும் பதவியிலிருந்த மேயர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

மிசிசாகா நகர மேயர் தேர்தலில், தற்போதைய மேயர் கரோலின் பாரிஷை எதிர்த்துப் போட்டியிட்ட நகர சபை உறுப்பினர் ஆல்வின் டெட்ஜோ வெற்றி பெற்றுள்ளதாக CP24-CTV தேர்தல் பிரிவு கணித்துள்ளது.

அதேவேளை, ஹாமில்டன் நகர மேயர் தேர்தலில் கீனின் லூமிஸ் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் மேயர் ஆண்ட்ரியா ஹோர்வாத் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments