Friday, November 20, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்'உலக கோப்பையை எதிர்கொள்ள தயார்' - அவுஸ்திரேலிய அணி தலைவர்

‘உலக கோப்பையை எதிர்கொள்ள தயார்’ – அவுஸ்திரேலிய அணி தலைவர்

இங்கிலாந்து-அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹோபர்ட்டில் நேற்று நடந்தது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதலாவது ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் இங்கிலாந்து 135 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வென்றிருந்தது.

2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து வெல்வது இதுவே முதல்முறையாகும்.

தோல்வி தொடர்பாக பேசிய அவுஸ்திரேலியா அணி தலைவர் மார்ஷ் கருத்து தெரிவிக்கையில்,

முதலில் இங்கிலாந்து அணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு போட்டிகளிலும் அவர்கள் எங்களைவிடச் சிறப்பாக விளையாடினார்கள். எங்கள் அணியில் முன்னேற்றம் செய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. எனவே, இன்னும் நிறைய உழைக்க வேண்டியுள்ளது.

தொடரில் நாங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், இது ஒரு நல்ல வீரர்கள் குழு. இந்த வீரர்கள் குழுவைப் பற்றி எனக்கு இன்னும் அதிக நம்பிக்கையும் உற்சாகமும் இருக்கிறது. இளம் வீரர்கள் சிறப்பான திறமையைக் கொண்டுள்ளனர். அவர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது பயணத்தைத் தொடங்கி முன்னேறி வருகின்றனர்.

அணியில் அனுபவம் குறைந்த வீரர்களும் இருக்கிறார்கள், அதே நேரத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் உள்ளனர்.

அடுத்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு இன்னும் 12 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் எங்களை நாங்கள் மேம்படுத்திக் கொள்வோம். உலகக் கோப்பையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments