Friday, November 20, 2026
spot_img
Homeஉலக செய்திகள்வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பில் டொனால்ட் ட்ரம்ப், விளாடிமிர் புடின், சீ ஜின்பிங் பங்கேற்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பில் டொனால்ட் ட்ரம்ப், விளாடிமிர் புடின், சீ ஜின்பிங் பங்கேற்பு

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு இடையே, சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்ற ‘கிலின் வில்லா’ (Kylin Villa) வளாகத்தில் மூன்று தலைவர்களும் ஒன்றாகத் தோன்றினர்.

பிரதான கூட்ட அறைக்குச் செல்வதற்கு முன்பு, தத்தம் நாடுகளின் தேசியக் கொடிகளுக்கு முன்பாக அதிகாரப்பூர்வப் படத்துக்கு அவர்கள் தோற்றினர்.

எனினும், புகைப்படம் எடுக்கும் தருணத்தில் தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.

இந்தச் சந்திப்பை ஒரு முக்கிய இராஜதந்திர மைல்கல்லாகக் குறிப்பிட்ட சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் மிக உயர்மட்ட அளவில் ஒன்றாகச் சந்திப்பது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார்.

“சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் நாட்டுத் தலைவர்கள் சந்திப்பது இதுவே முதல் முறை; இது முன் எப்போதும் இல்லாத முக்கியத்துவம் வாய்ந்தது,” என சீனாவின் அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua) சீ ஜின்பிங்கை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அன்றைய தினத்தின் முற்பகுதியில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஜனாதிபதி சீ ஜின்பிங் ஆகிய இருவருடனும் தனித்தனியாக இருதரப்புச் சந்திப்புகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments