பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு (Trial-at-Bar) முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


