Friday, November 20, 2026
spot_img
Homeகனடா செய்திகள்‘மசோதா 21’இற்கு எதிராக 3.45 மில்லியன் டொலர் செலவு!

‘மசோதா 21’இற்கு எதிராக 3.45 மில்லியன் டொலர் செலவு!

கியூபெக் மாகாணத்தின் மதச்சார்பின்மைச் சட்டமான ‘மசோதா 21’ தொடர்பான சட்டப் போராட்டத்திற்காக மத்திய அரசின் நீதித் திணைக்களம் சுமார் 3.45 மில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பிளாக் கியூபெகோயிஸ் (Bloc Québécois) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரியால் போர்ட்டின் (Rhéal Fortin) எழுப்பிய எழுத்துமூலமான கேள்விக்கு, மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பதிலிலேயே இந்தச் செலவு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்விவகாரம் குறித்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ரியால் போர்ட்டின், மாகாண சட்டமன்றம் ஒன்றினால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, கியூபெக் மக்களின் வரிப்பணத்தை மத்திய அரசு செலவிடுவது வெட்கக்கேடானது எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

அதிகாரப் பதவிகளில் இருக்கும் அரசாங்க ஊழியர்கள் மத அடையாளங்களை அணிவதற்குத் தடை விதிக்கும் ‘மசோதா 21’, அரசாங்க சேவைகளை வழங்குபவர்களும் பெறுபவர்களும் தங்களது முகத்தை மறைக்காமல் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.

இச்சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு தற்போது கனடா உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இதில் கியூபெக் அரசாங்கம் ‘விதிவிலக்குச் சரத்தை’ (notwithstanding clause) பயன்படுத்தியமை செல்லுபடியாகுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

இவ்வழக்கில் மத்திய அரசாங்கம் மனுதாரராக இல்லாவிட்டாலும், ஒரு தலையீட்டாளராக (intervenor) உச்ச நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments