Thursday, November 19, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்IPL 2027 தொடர் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து 9 வீரர்கள் விடுவிப்பு

IPL 2027 தொடர் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து 9 வீரர்கள் விடுவிப்பு

ஐ.பி.எல். மினி ஏலத்தை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், துருவ் ஜூரெல், லுவான்-ட்ரி பிரிட்டோரியஸ், அமன் ராவ் பெராலா, டொனவன் பிரேரா, ஷுபம் துபே, தசுன் ஷனகா, ரவீந்திர ஜடேஜா, யஷ் ராஜ் புஞ்சா, ஜோப்ரா ஆர்ச்சர், முகமது ஷமி (டிரேட் மூலம்), நந்த்ரே பர்கர், ரவி பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த் (டிரேட் மூலம்), பிரிஜேஷ் சர்மா, சந்தீப் சர்மா மற்றும் சுஷாந்த் மிஸ்ரா ஆகிய 19 வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்கவைத்துள்ளது.

அதேவேளை, ஆடம் மில்னே, எமன்ஜோத் சாஹல், குல்தீப் சென், குவேனா மபாகா, ரவி சிங், சிம்ரன் ஹெட்மையர், துஷார் தேஷ்பாண்டே, விக்னேஷ் புத்தூர் மற்றும் யுத்வீர் சரக் ஆகிய 9 வீரர்களை அணியிலிருந்து விடுவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் மினி ஏலத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 22.05 கோடி ரூபா மீதித் தொகையைக் கொண்டுள்ளதுடன், 6 வீரர்களைத் தெரிவு செய்வதற்கான இடங்களும் எஞ்சியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments