மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட தலைமை அலுவலகத்தின் அனைத்துச் சேவைகளையும் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் (Appointment) முறையின் கீழ் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.அது தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
23 ஆம் திகதி முதல் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட தலைமை அலுவலகத்தினால் வழங்கப்படும் அனைத்துப் பொதுமக்கள் சேவைகளையும் முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் முறையின் கீழே பெற்றுக் கொள்ளலாம்.
பொதுமக்களின் வசதி கருதி 2026.11.23 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த தினசரி முன்பதிவு வாய்ப்புகளின் எண்ணிக்கையைத் தற்போது இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உயர்த்துவதற்குத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய முன்னரை விட அதிகளவான சேவை பெறுநர்களுக்குத் தினசரி விரைவாகவும் இலகுவாகவும் தமது சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்.
சேவை பெறுநர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதேனும் ஒரு முறையின் ஊடாகத் தமக்கு வசதியான நேரத்தை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்ள முடியும்:
தொலைபேசி ஊடாக: 011 2 117 116 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம்.மேலும் இணையத்தளம் ஊடாக: https://dmtappointments.dmt.gov.lk எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம்.
ஆகையால், 23 ஆம் திகதி முதல் நாரஹேன்பிட்ட தலைமை அலுவலக வளாகத்திற்கு அருகில் அதிகாலை முதலே தேவையற்ற விதத்தில் வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும்,
சேவை பெறுநர்களின் வசதி மற்றும் நேரத்தைச் சேமிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளும் முறையை மாத்திரம் பின்பற்றிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.


