இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய ஏ அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றது.
பின்னர் 278 என்ற வெற்று இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை ஏ அணி 48.5 ஓவர்களில் 269 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.



