இலங்கை மற்றும் இந்திய ஏ அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்சி 14 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தார்.
ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய ஏ அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை பெற்றது.
இந்திய ஏ அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்சி 12 பந்துகளில் 14 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
மூன்று 4 ஓட்டங்களை மட்டுமே பெற்ற அவர், ஒரு ஆறு ஓட்டத்தைக்கூட பெறவில்லை.
முகமது சிராஸ் வீசிய பந்தில், ஷான் ஆராச்சிகேவிடம் பிடிகொடுத்து சூர்யவன்சி ஆட்டமிழந்தார்.
278 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை ஏ அணி பதிலளித்தாடி வருகிறது.


