இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி தமது முதலாம் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி 98 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 32 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் தமது முதலாம் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்று ஸ்திர நிலையை எட்டியது.
அதன்பின்னர் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இலங்கை அணி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணிக்கு, ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
முதல் 10 ஓட்டங்களுக்குள் லஹிரு உதார (7) மற்றும் அனுபவ வீரர் தினேஷ் சந்திமால் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.
தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் (16) ஆட்டமிழக்க, 39 ஓட்டங்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்நிலையில் இக்கட்டான சூழ்நிலையில் கைகோர்த்த தனஞ்சய டி சில்வா (37) மற்றும் பசிந்து சூரியபண்டார (38) ஆகியோர் ஓரளவு நிதானமாக ஆடி அணியைச் சரிவிலிருந்து மீட்க முயன்றனர்.
அதன் பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் குசல் மெண்டிஸ், 126 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்களைப் பெற்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தும் பொறுப்பை ஏற்ற சொனால் தினுஷ (54 ஓட்டங்கள்) மற்றும் பின்வரிசையில் அதிரடியாக ஆடிய மிலன் ரத்நாயக்க 88 பந்துகளில் 12 பவுண்டரிகளை விளாசிய மிலன் ரத்நாயக்க இறுதிவரை ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 300-ஐக் கடக்கச் செய்தார்.
பாகிஸ்தான் தரப்பில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அப்பாஸ் 34 ஓவர்கள் வீசி 15 ஓவர்களை ஓட்டமற்ற ஓவர்களாக மாற்றியதுடன், 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அவருக்குத் துணையாக அமீர் ஜமால் 3 விக்கெட்டுகளையும், ரசவுல்லா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இறுதியில், இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 316 ஓட்டங்களை எடுத்தது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணிக் 80 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 2 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை பாகிஸ்தான் அணி 1க்கு 0 என்ற அடிப்படையில் வெற்றிக் கொண்டுள்ளது.


