Saturday, November 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்13 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற கொலை - இருவருக்கு மரண தண்டனை

13 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற கொலை – இருவருக்கு மரண தண்டனை

2013 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நபர் ஒருவரின் கொலைச் சம்பவம் தொடர்பாக இரு பிரதிவாதிகளுக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தினால் நேற்று (19) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மீட்டியாகொட, கலுபே 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில், தனிப்பட்ட தகராறின் போது களுவாஹந்தி தீபால் வீரரத்ன என்பவரைப் தடியால் தாக்கிக் கொலை செய்தமை தொடர்பில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளான ஹிக்கடுவ, கலுபேயைச் சேர்ந்த 51 வயதான அஜித் என்ற ‘பொட்ட கிரா’ மற்றும் கொரட்டகொடவைச் சேர்ந்த 41 வயதான லத்து அமித் ஆகியோருக்கு எதிராக விசாரிக்கப்பட்ட வழக்கை நிறைவு செய்த மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அரச சட்டத்தரணி செனுரி குணதிலக்க முறைப்பாட்டுத் தரப்பை நெறிப்படுத்தியதுடன், அன்றைய காலகட்டத்தில் மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் தினேஷ் நிசாந்தவினால் இந்த வழக்கு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments