Tuesday, November 3, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே விலகியுள்ளார்.

டெவான் கான்வே, பயிற்சியின்போது சக வீரர் மேட் ஹென்றியுடன் எதிர்பாராதவிதமாக மோதியதில் தலையில் காயமடைந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இந்தச் சம்பவம் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது நிகழ்ந்துள்ளது.

ஏற்கனவே முக்கிய வீரர்களான மார்க் சாப்மேன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது கான்வேயும் விலகியிருப்பது நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வரிசைக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில், டெவான் கான்வே விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டிம் செய்ஃபர்ட் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments