Tuesday, November 3, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க திட்டம்

கனடாவில் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க திட்டம்

கனடாவில் உணவுப் பொருட்களின் விலையைக் குறைத்து, விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர் செலவில் உணவு முனையங்கள் மற்றும் உணவு மையங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வின்னிபெக்கில் அமைந்துள்ள CentrePort Canada தனது தொழில்துறை மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்புகளைப் பெருமளவில் விரிவுபடுத்தி வருகிறது.

நாடு முழுவதும் நான்கு பெரிய உணவு முனையங்களையும், 20 முதல் 40 சிறிய உணவு மையங்களையும் உருவாக்குவது அரசாங்கத்தின் திட்டமாகும். இதன்மூலம் உணவுப் பொருட்களின் விநியோகச் செலவைக் குறைத்து, நுகர்வோருக்கு மலிவான விலையில் பொருட்களை வழங்குவதே நோக்கமாகும்.

மேலும், CentrePort Canada, சர்ச்சில் துறைமுகம் மற்றும் ஹட்சன் பே ரயில்வே உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து புதிய போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலம் கனடாவின் வடக்குப் பகுதிகளுக்கும் சர்வதேச சந்தைகளுக்கும் உணவுப் பொருட்களை விரைவாகக் கொண்டு செல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, வின்னிபெக் விமான நிலையத்தை ரயில் மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துடன் இணைக்கும் உட்கட்டமைப்பு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments