மகளிர் ரி20 கிரிக்கெட் வரலாற்றில் வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய வீராங்கனை பிரேமா ராவத் புதிய சாதனை படைத்துள்ளார்.
புனேவில் நடைபெற்ற சீனியர் மகளிர் ரி20 டிராபி தொடரில் உத்தரகாண்ட் அணிக்காக விளையாடிய அவர், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
இப்போட்டியில் உத்தரகாண்ட் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது. பதிலுக்கு விளையாடிய ஹைதராபாத் அணி 98 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்ததால், உத்தரகாண்ட் அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் சாதனை படைத்த பிரேமா ராவத், பந்துவீச்சிலும் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆல்ரவுண்டராக அசத்தினார்.
இதற்கு முன்னர் பாகிஸ்தான் வீராங்கனை ஃபாத்திமா சனா 15 பந்துகளில் அரைசதம் அடித்திருந்த சாதனையை முறியடித்து பிரேமா ராவத் கவனம் பெற்றுள்ளார்.


