Tuesday, November 3, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சட்டவிரோத காடழிப்பு - ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு

சட்டவிரோத காடழிப்பு – ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு

வன்னி மாவட்டத்தில் சட்டவிரோத காடழிப்புகளை வனவளத் திணைக்களம் கட்டுப்படுத்தத் தவறுவதாகவும், திணைக்களத்தின் சில அதிகாரிகள் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (03) நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது, சுற்றாடல் அமைச்சர் வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தியிடம் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

பொதுமக்கள் தமது பூர்வீக வாழ்விடக் காணிகள் மற்றும் விவசாய நிலங்களைத் துப்புரவு செய்வதற்கு உரிய ஆவணங்களைக் கோரி தடைவிதிக்கும் வனவளத் திணைக்களம், மறுபுறம் சட்டவிரோத காடழிப்புகள் மற்றும் படையினரின் சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, வவுனியா வடக்கு திரிவச்சகுளம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் இடம்பெற்ற காடழிப்புகள் தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சட்டவிரோத மரம் வெட்டுதல், காடழிப்பு மற்றும் நிர்மாணப் பணிகளைக் கண்காணிப்பதில் வனவளத் திணைக்களத்தின் பொறுப்புக்கூறலை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி, பாராளுமன்ற உறுப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments