Tuesday, November 3, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழ் - மன்னார் வீதியில் பாரியளவான போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்

யாழ் – மன்னார் வீதியில் பாரியளவான போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்

யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி பாடசாலைக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று வீதித் தடை சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை சோதனையிட்டதில் பெருந்தொகையான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு (02) இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த மோட்டார் சைக்கிள்களை நிறுத்துமாறு சைகை செய்யப்பட்டபோதிலும், ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தன்னிடமிருந்த பொதி ஒன்றை அந்த இடத்திலேயே கைவிட்டு, இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் நிறுத்தாமல் செலுத்திச் சென்றுள்ளனர்.

கைவிடப்பட்ட பொதியை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதிலிருந்த 14 சிறிய பொதிகளுக்குள் 13 கிலோ 340 கிராம் ஹெரோயின் மற்றும் 01 கிலோ 62 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

தப்பிச்சென்ற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments