Monday, November 2, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இந்திய கடற்கரை பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள்!

இந்திய கடற்கரை பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள்!

இந்தியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில், இன்று அதிகாரிகள் மக்களை வெளியேற்றும் பணியைத் தொடங்கினர்.

கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான புயலால் பாதிக்கப்பட்ட அதே பகுதியில், மீண்டும் ஒரு தீவிர புயல் கரையை நெருங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த வாரம் ஏற்பட்ட ‘அர்னாப்’ (Arnab) புயலை விட, தற்போது உருவாகியுள்ள ‘முரசு’ (Murasu) புயலின் தீவிரம் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தாக்கிய புயலால் ஆறு பேர் உயிரிழந்தனர்.பல வீடுகளும் பயிர்களும் அழிந்தன.

‘முரசு’ புயல் நாளை(03) அதிகாலை வேளையில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் பிரகர் ஜெயின், இன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “இதுவரை சுமார் 2,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர், இந்தப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. மொத்தம் 30,000 பேரை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

வங்காள விரிகுடாவில் உருவான இந்தப் புயல், இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் அடிக்கடி பேரழிவை ஏற்படுத்தும் வெப்பமண்டல புயல்களின் வரிசையில் ஒன்றாகும்.

இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதிகளான தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், இந்தப் புயலால் அதிக பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments