பிரஜைகள் எதிர்பார்க்கும் நேர்மையான கலாசாரத்துடன் கூடிய வினைத்திறனான அரச சேவையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சுகள் மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நேர்மையான அரச சேவைக்கான “நேர்மையான கலாசாரம் – கிளீன் ஶ்ரீலங்கா” தேசிய திட்டத்திற்கு இணையாக, நேற்று (27) இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற கல்வி அமைச்சின் தேசிய நேர்மை வார நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.


