நடிகை வனிதா விஜயகுமார் இயக்கத்தில், தானே முன்னணி பாத்திரத்திலும் நடித்த மிஸஸ் & மிஸ்டர் திரைப்படம் இன்று வெளியானது. இந்தப் படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மற்றும் செஃப் தாமு, பவர்ஸ்டார் சீனிவாசன், ஷகீலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். வனிதாவின் மகள் ஜோவிகாவே படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், மிஸஸ் & மிஸ்டர் படத்தில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி வைத்திருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இளையராஜா இசையமைத்திருந்த `ராத்திரி சிவராத்திரி’ பாடலை, வனிதா விஜயகுமாரின் படத்தில் தன்னுடைய அனுமதியில்லாமல் கூறி, இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனையடுத்து, மிஸஸ் & மிஸ்டர் படத்தில் இருந்து ராத்திரி சிவராத்திரி பாடலை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடாக இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை திங்கள்கிழமையில் (ஜூலை 14) விசாரிக்கப்படும் என்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு கூறியது.


