நடிகர் தனுஷ் விரைவில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தனுஷ் பாஜகவில் இணைகிறாரா இல்லையா என்பது தற்போது வரை உறுதியாகத் தெரியவில்லை என்றாலும், அவர் சொந்தமாகக் கட்சி தொடங்குவது உறுதி எனத் தனது நண்பர்கள் மூலமாக தனக்குத் தெரியவந்துள்ளதாக ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் தனுஷிற்கென தனி ரசிகர் பட்டாளமும், சினிமா துறையில் பலத்த வரவேற்பும் உள்ளது.
அவர் நடித்த அனைத்துப் படங்களும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனுஷின் அரசியல் வருகை குறிப்பாக 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வாக்குகளை ஈர்க்கவும் பிரிக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனுஷின் இந்த அரசியல் வருகையால் தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சில சிக்கல்களும் சிரமங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்


