Wednesday, August 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சர்வதேச கராத்தே போட்டியில் களமிறங்கும் யாழ் இளைஞர்!

சர்வதேச கராத்தே போட்டியில் களமிறங்கும் யாழ் இளைஞர்!

சர்வதேச கராத்தே போட்டியில் களமிறங்கும் யாழ் இளைஞர்!

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகி, தாய்லாந்தில் ஆரம்பமாகவுள்ள, சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

சர்வதேச கராத்தே போட்டியில் களமிறங்கும் யாழ் இளைஞர்

யாழ்.சென்.ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ்.இந்துக் கல்லூரியில் உயர்கல்வியையும் தொடர்ந்த இவர், மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிறிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், தற்போது அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வருகின்றார்.

கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ள இவர், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் JKS கராத்தே பாடசாலைகளின் ஊடாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments