ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய படபெதிகே துஷான் சத்சர என்ற ‘களு மல்லி’ என்பவர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தென் மாகாணத்தில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில்,படபெதிகே துஷான் சத்சர என்ற 25 வயதுடைய இச்சந்தேகநபருக்கு எதிராக, இன்டர்போல் மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இலங்கை பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
‘களு மல்லி’ என்பவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஷெஹான் சத்சர என்ற “தெஹிபாலே”வின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.


