Wednesday, November 4, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஐ.பி.எல் 2027 தொடர் - ஹர்திக் பாண்டியா குறித்து வெளியான தகவல்

ஐ.பி.எல் 2027 தொடர் – ஹர்திக் பாண்டியா குறித்து வெளியான தகவல்

ஐ.பி.எல் 2027 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பஞ்சாப் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விஷ்ணு வினோத் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.பி.எல் 2027 தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் நட்சத்திரவீரர்கள் டிரேடிங் குறித்த செய்திகள் வெளியாகி இரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

முன்னதாக, ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அணித்தலைவர் பதவி கிடைக்கக்கூடிய ஒரே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மட்டும்தான் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்துள்ள அஸ்வின், ”ஹர்திக்கை வாங்குவதற்கு கொல்கத்தா அணி, ஹர்ஷித் ராணா அல்லது ரிங்கு சிங்கை மும்பை அணிக்கு வர்த்தக முறையில் கொடுக்கலாம். மும்பை அணியுடன் பேசி ரஷித் கானைக் கொடுத்துவிட்டு ஹர்திக்கை மீண்டும் வாங்குவதற்கு குஜராத் அணி கூட முயற்சிக்கலாம்.

ஹர்திக் பாண்டியாவை வாங்க சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் மட்டுமே முயற்சி செய்து வருகின்றன என்றும் தெரிவித்தார்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments