முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் 25ஆம் திகதி அறிவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


