கியூபெக் மாகாணத்தில் எதிர்காலத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்கவுள்ள நிலையில், அதனைச் சமாளிப்பதற்கு புதிய மின்சார உற்பத்தி ஆதாரங்கள் தேவைப்படுவதாக Hydro-Québec எச்சரித்துள்ளது.
2027 முதல் 2041 வரையான மின்சார விநியோகத் திட்டத்தின்படி, 2029ஆம் ஆண்டு முதல் மின்சாரத் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையில் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழல் உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 15 ஆண்டுகளில் மின்சாரத் தேவை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைச் சமாளிப்பதற்காக 2041ஆம் ஆண்டுக்குள் 24,000 மெகாவாட் புதிய மின்சார உற்பத்தித் திறனைச் சேர்க்க Hydro-Québec திட்டமிட்டுள்ளது.
மேலும், 2035ஆம் ஆண்டுக்குள் 21 Terawatt-hours அளவிலான மின்சாரத்தைச் சேமிக்கும் நோக்கிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தேவையான அளவு புதிய மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படாவிட்டால், அண்டை மாகாணங்கள் மற்றும் அமெரிக்காவிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.
அணுசக்தி மூலம் மின்சாரத் தேவையை உடனடியாகச் சமாளிக்கும் திட்டத்தை Hydro-Québec தற்போது நம்பியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


