Wednesday, November 4, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் உணவின்றித் தவிக்கும் மக்கள்

கனடாவில் உணவின்றித் தவிக்கும் மக்கள்

கனடாவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்து வரும் சூழலில், மக்கள் உணவைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நவம்பர் 3, 2026 அன்று Salvation Army அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கையில் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மளிகைப் பொருட்களின் அதீத விலை உயர்வு காரணமாக, தங்களால் உணவுப் பொருட்களை வாங்க இயலவில்லை என்றும், இதன் காரணமாகப் பல வேளைகளில் உணவை உட்கொள்வதைத் தவிர்ப்பதாகவும் கனடா நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாமானிய மக்களின் அன்றாட உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments