Monday, October 26, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இலங்கை டெஸ்ட் தொடர் - பாகிஸ்தான் அணி அறிவிப்பு

இலங்கை டெஸ்ட் தொடர் – பாகிஸ்தான் அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக 14 பேர் கொண்ட முதற்கட்ட அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாபர் அசாம் தொடர்ந்து அணித்தலைவராக செயல்பட உள்ளார்.

இதேவேளை, முகமது தாஹா, முகமது சுலைமான் மற்றும் சமீர் மின்ஹாஸ் ஆகிய மூன்று வீரர்களுக்கும் முதல் முறையாக டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் சல்மான் அலி ஆகாவை மீண்டும் சேர்த்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பாதியிலேயே அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட சல்மான் அலி ஆகா மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அலி உஸ்மான் ஆகியோர் மீண்டும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

மேலும், முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக், ஷான் மசூத் உள்ளிட்டோர் அணியில் இடம்பெறவில்லை.

பாகிஸ்தான் டெஸ்ட் அணி, பாபர் அசாம் (அணித்தலைவர்), அப்துல்லா ஃபசல், அலி உஸ்மான், அராபத் மின்ஹாஸ், அஸான் அவாய்ஸ், முகமது அப்பாஸ், முகமது காசி கோரி, முகமது சுலேமான், முகமது தாஹா, ரசாவுல்லா, சாத் பைக் , சல்மான் அலி மின்கேஸ், சாமுத் அலி ஆகா, சாமுத் அலி ஆகா.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments