Monday, October 26, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு காலமானார்

பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு காலமானார்

பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் கே.தாமோதரன் (72 ) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று(25) காலமானார்.

2010-ம் ஆண்டில், 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 விதமான உணவு வகைகளைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

சமையல் கலையில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பின் காரணமாக பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கௌரவப்படுத்தியுள்ளது.

உணவக மேலாண்மை, சமையல் கலைத் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் நிபுணர் ஆவார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments