Monday, October 26, 2026
spot_img
Homeகனடா செய்திகள்டொராண்டோ கடத்தல் வழக்கு: புதிய நபர் அடையாளம் காணப்பட்டார்

டொராண்டோ கடத்தல் வழக்கு: புதிய நபர் அடையாளம் காணப்பட்டார்

டொராண்டோ ஸ்கார்பாரோ பகுதியில் மூன்று இளம் குழந்தைகள் அவர்களின் தாயாரால் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் மிட்லேண்ட் அவென்யூ மற்றும் எக்ளிண்டன் அவென்யூ கிழக்கு பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதுகாப்பு மேற்பார்வையின் கீழ் குடும்ப உறுப்பினரைச் சந்திக்க வந்த நான்கு மாத குழந்தை அனஸ்தாசியா, மூன்று வயது சிறுமி இரினா மற்றும் ஆறு வயது சிறுவன் டேனியல் ஆகிய மூன்று குழந்தைகளை, குழந்தைகளின் சட்டப்பூர்வ பாதுகாப்பு உரிமை இல்லாத தாய் சோமெர்டா மிக்லெஸ்கு கடத்திச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 22 வயதான சோமெர்டா மிக்லெஸ்கு மீது பெற்றோர் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் ஒன்ராறியோ பதிவு எண் DJJS 875 கொண்ட 2017 வெள்ளை நிற ஃபோர்டு எக்ஸ்பெடிஷன் வாகனத்தை ஓட்டிச் செல்வதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த வாகனத்தின் உரிமையாளரான டொராண்டோவைச் சேர்ந்த 25 வயது அயோனட் ஸ்ட்ரோ என்பவர் இவ்வழக்கில் தொடர்புடைய நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் மீது பிணை உத்தரவை மீறிய நான்கு குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளன.

குழந்தைகளுக்கு உடனடி ஆபத்து இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லாததாலும், அவர்கள் மாகாணத்தையோ அல்லது நாட்டையோ விட்டு வெளியேற முயற்சிக்கவில்லை என்பதாலும் அம்பர் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படவில்லை என டொராண்டோ காவல்துறை ஆய்வாளர் ஜெஃப் அலிங்டன் தெளிவுபடுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments